கடை வீதி

கண்டதில், கற்றதும், கவர்ந்ததும்...

Thursday, November 17, 2005

இந்தியத் திரைப் படங்களில் வரும் மிகச் சிறந்த 10 வசனங்கள்

10. நீ 7 மணிக்கு பீச்சுக்கு போ. அங்க பீட்டர் டையமண்டோட இருப்பான். இந்த கமர்கட்டை அவன்ட குடுத்திட்டு டையமண்டை வாங்கிக்கோ. ஹோட்டல் மெரினா போய் சரக்கை ரீட்டாகிட்ட சேத்துரு. ஜாக்கிரதை... போலீஷ்... பாதி இப்போ... வேலை முடிஞ்ச பிறகு மீதி...

9. ஐயோ முதலாளி! திடீர்னு கேட்டா, அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்? எனக்கு கல்யாண வயசுல ரெண்டு பொண்னுங்க இருக்காங்க...

8. வேலைக் காரா நாய்ங்களா... என்னை பகைச்சிக்கிட்டா உங்களை எல்லாம் குடும்பத்தோட அழிச்சிருவேன்.

7. இவ்வளவு நாள் உன்னை பெத்து, வளத்து, ஆளாக்கினதுக்கு... இது தான் நீ செய்யிற கைம்மாறா??? .... என் வீட்டை விட்டு வெளியே போ... என்னை பொருத்த வரை நீ செத்துட்ட....

6. கடவுளே, எனக்குன்னு இதுவரை எதையும் நான் கேட்டதில்லை... இப்போ முதல் முறையா...

5. அம்மா, நான் BA first classல பாஸ் பண்ணிட்டேன்மா... -- உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு மகனே! இப்போ மட்டும் உங்க அப்பா உயிரோட இருந்தா எவ்வளவு சந்தோசப் படுவார் தெரியுமா?

4. சங்கர்... உங்க அம்மா எங்க கஷ்டடியில் இருக்காங்க... ஒழுங்கா அந்த டையமண்ட் எங்க இருக்குன்னு சொல்லிரு...

3. விஜய்.. இந்த இடத்த போலீஷ் சுத்தி வளைச்சாச்சு.. தப்பிக்க நினைக்காத...

2. இங்க நீ எவ்வளவு கத்துனாலும் யாருக்கும் கேக்காது... இப்போ உன்னை அந்த கடவுளே நினச்சாலும் காப்பாத்த முடியாது.

1. ராஜா.... உங்க வாரிசு இப்போ என் வயித்தில வளர்ந்த்துகிட்டு இருக்கு.

துன்புறுத்தப் படாத விலங்கு

சென்ற வாரம், தொலைக்காட்சி மெகா தொடரைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. தொடரின் தயாரிப்பாளருக்கு தொடரின் நடிக நடிகையர் மேல் என்ன கோபமோ தெரியவில்லை.
தொடர் ஆரம்பத்தில் "இத்தொடரில் நடிக்கும் விலங்குகள் அனைத்தும் துன்புறுத்தப் படவில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று காண்பிக்கிறார்கள்.

முத்தான வசனங்கள்

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசையில் குழந்தைகள் தினச் சிறப்பு திரைப் படமாக காண்பிக்கப் பட்ட படத்தில் வந்த வசனம் ஒன்று என்னைக் கவர்ந்தது.

பணக்கார நாயகி தன் தந்தையிடம் சொல்லுகிறார்: "ஒரு ரிக்சாக் காரன் மனைவி ஆகிறதில் நான் ரொம்ப பெறுமைப் படுறேன்"
ஆஹா! எவ்வளவு எதார்த்தமான வசனம்!!!

ம்ஹ்ம்... எப்பொழுது நம் ஊர்ப் பெண்கள் "ஒரு கம்ப்யூட்டர் காரன் மனைவி ஆகிறதில் நான் ரொம்ப பெறுமைப் படுறேன்" என்று சொல்லப் போகிறார்களோ???



தமிழ் சினிமாவில் இது போன்று நிறைய வசனங்களைக் கேட்கலாம். அவற்றில் என்னைக் கவர்ந்த சில...

காதலர் தினம் - நாயகன் நாயகியிடம் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சியில்...

நாயகன் : "ஐ லவ் யூ ரோசா"

நாயகி : "ஐ லவ் யூ ராசா"

உலகம் சுற்றும் வாலிபன் - விஞ்ஞானி முருகன் (MGR), பேரழிவை ஏற்படுத்தும் ஆயூதம் ஒன்றை, உலக மக்களின் நன்மைக்காக கண்டுபிடிக்கும் நேரம் சொல்லுகின்ற...

"சக்ஸஸ்... சக்ஸஸ்!!!"